கேம்பிரிட்ஜில் உள்ள தனியார் அராய்ச்சி பல்கலைகழகமான மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் காட்ஸ் தலைமையிலான குழு பின்னால் வளையக் கூடிய தன்மை உள்ள நான்கு கால் ரோபோவை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகம், அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒரு உயர்ந்த பல்கலைக்கழகம் ஆகும். தற்போது இப்பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் காட்ஸ் தலைமையிலான குழு, மினி சீட்டா(mini cheetah) என்று அழைக்கப்படும் 9 கிலோ எடையுள்ள 360 டிகிரி பின்னால் வளையக் கூடிய அரியவகை ரோபோவை கண்டுப்பிடித்துள்ளனர். இது மனிதர்களை விட இருமடங்கு வேகமாக நடக்கும். கால்கள் வளையவும் ஆட்டவும் இதில் 12 மோட்டார்களை உள்ளடக்கியுள்ளனர்.

இதுகுறித்து பெஞ்சமின் கூறுகையில்,” இந்த ரோபோவை நாங்கள்  உருவாக்க முக்கிய காரணம் என்னவென்றால், இது எளிமையான மற்றும் பைத்தியக்காரத்தனமான விஷயங்களை செய்வதற்கே.” மேலும் அவர்,” இந்த ரோபோ சூப்பர் வலுவானது மற்றும் எளிதில் உடைக்க இயலாதது, அப்படி உடைந்துவிட்டால் அதை சரி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை”, என்று தெரிவித்தார்.

இந்த கண்டுப்பிடிப்பின் பின்னால் இருக்கும் குழுவானது ரோபோவின் பல நகல்களை உருவாக்கி மற்ற ஆராய்ச்சி குழுக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது